தரக் கட்டுப்பாடு ஆய்வு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

சிவகங்கையில் நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தரக் கட்டுப்பாடு ஆய்வு மையத்தை கே. ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தான் போட்டியிடுவாரா என்பதை தலைமைதான் அறிவிக்க வேண்டும் என்றும், எதிரில் யார் நிற்பார்கள் என்பதை கூற முடியாது என்றும் தெரிவித்தார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் புகைப்படத்தை அகற்றியதற்கு அதிமுக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி