‘எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்’ – குடும்பத்துடன் தர்ணா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தெக்கூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பச்சையப்பன், பல ஆண்டுகளாக அரசு வழங்கிய மானிய வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டுப் பகுதி தனக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று கூறி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் அந்த இடத்தை அகற்றி ஒப்படைத்ததால், எதிர்ப்பு தெரிவித்து பச்சையப்பன் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்" என்று கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், தனது அடையாள ஆவணங்களை ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிட்டுச் சென்றார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி