சிவகங்கை: அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

சிவகங்கையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். 

சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சிவராமன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிலையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்வதாக கூறினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து சிவகங்கை டிஎஸ்பி அமல் அட்வின் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 62 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி