சிவகங்கை: கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது

சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சிவகுமார், மேலூர் கோவாணிப்பட்டி சந்திப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அஜிஸ் நகரைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுமார் 2½ அடி நீளமுள்ள வாளுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் அவரிடமிருந்த வாளைப் பறிமுதல் செய்து கதிர்வேலைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி