மேலும், அருகில் இருந்த பாண்டி (66) என்பவரும் தாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக திருப்பாசேத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர், டி.புதூர் கண்மாயிலிருந்து சோணைமுத்துவின் தலையை மீட்ட போலீசார், அதை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பி.வேலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து (25) மற்றும் நாட்டார்குடியைச் சேர்ந்த சமயதுரை (25) மீது சந்தேகம் எழுந்தது. சோணைமுத்துவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டார்.
இக்குற்றவழக்கில் சமயதுரை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த சிங்கமுத்துவையும் தற்போது திருப்பாசேத்தி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.