சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நடிகர் கருணாஸ், நகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக சிவகங்கை நகராட்சி 25, 1, 6, 2, 3, 12 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இதனால் அந்தப் பகுதிகளில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. அவருடன் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.