காளையார்மங்கலம் அருகே நகை கொள்ளை

சிவகங்கை அருகே காளையார்மங்கலம் புதுவளவு பகுதியில், நேற்று (நவ.19) அதிகாலை 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் முருகப்பன் என்பவரை கட்டிப்போட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் என மொத்தம் 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவரது தாயார் மீனாட்சி ஆச்சியை மிரட்டி பீரோ சாவியைப் பெற்றதாகவும், ஆனால் பெரும்பாலான நகைகள் வங்கி லாக்கரில் இருந்ததால் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி