ஜெயலலிதா பிறந்த நாள் விழா – அதிமுக சார்பில் கொண்டாட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே எம். ஜி. ஆர் சிலை பகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எம். ஜி. ஆர் சிலைக்கும், ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பட்டாசுகள் வெடித்து ஜெயலலிதா பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி