சிவகங்கை அருகே திரளா உடைப்புப் புதூரில் சிவசக்தி விநாயகர்-தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். போட்டியின் போது காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.