SIR பணிகளில் முறைகேடு - மனு அளித்த எம். எல். ஏ

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இறந்தவர்கள், இரட்டைப் பதிவு, முகவரி கண்டறிய முடியாத வாக்காளர்களின் படிவங்களில், ஆளும் கட்சியின் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான PR. செந்தில்நாதன், தேர்தல் அலுவலரிடம் மனு அளித்து, போலிப் பதிவுகளை ஆய்வு செய்யக் கோரியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி