சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இமாம் முஹம்மது அன்சர் மிஸ்பாகி சொற்பொழிவாற்றி தொழுகையை நடத்தினார். தலைமை இமாம் முஹம்மது பிலால் தாவூதி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதேபோல், சிவகங்கை நகரிலுள்ள மேலும் ஐந்து பள்ளிவாசல்களிலும் அந்தந்த நிர்வாகத் தலைவர்கள் தலைமையில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.