IJK நிர்வாகிகள் மாவீரன் ரூசோ நினைவிடத்தில் அஞ்சலி

கங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாவீரன் ரூசோவின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரூசோவை நினைவுகூர்ந்து, இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) மாநில போராட்டக்குழு செயலாளர் அமலன் சவரிமுத்து, மாநில அமைப்புச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர் தலைமையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். ரூசோவின் இல்லத்திற்கும் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி