சிவகங்கையில் ஒரு மணி நேரமாக பலத்த மழை

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இன்று காலை முதல் வெயில் கடுமையாக அடித்துக் கொண்டிருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிவகங்கை நாட்டரசன்கோட்டை, காஞ்சிரங்கால், வாணியங்குடி, ரோஸ் நகர், காளவாசல், காமராஜர்காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிழவி வருகிறது. சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் அவதியுற்ற பொதுமக்கள், இன்று பெய்த பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி