சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் எதிரில், சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில துணைத்தலைவர் பி. தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் இல்லாத தொழிலாளர்களை சேர்க்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர்கே. பாண்டி, மாவட்டச்செயலர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் டி. கண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி