சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் சத்தியபாமா வரவேற்றுரை வாசித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மருத்துவர் மருதுபாண்டியன், மாணவ, மாணவிகள் 95 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: மாணவர்கள் வெளி உலக தொடர்புகளில் ஈடுபடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக நோயாளிகளிடம் பேசும் போது, அவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கனிவுடன் பேசி மருத்துவ அறிவைப் பகிர்ந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி