சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சென்னை சேதுபாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் சேது குமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகம் என்றும், கல்விதான் அழியாத செல்வம் என்றும் அவர் குறிப்பிட்டார். பட்டதாரிகள் உயர்ந்த வேலைவாய்ப்பைப் பெறவும், பிறருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவன உரிமையாளராக விளங்கவும் வாழ்த்தினார். விழாவில் மொத்தம் 1141 மாணவ, மாணவியருக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன.