பிலாமிச்சம்பட்டியில் மாபெரும் மாட்டுவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டம் பிலாமிச்சம்பட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்நிலையில் பெரிய மாட்டுவண்டி பிரிவுக்கு எட்டு மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டி பிரிவுக்கு ஆறு மைல் என இரு பிரிவுகளாக போட்டி பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. 

முதல் பரிசை வெல்வதற்கு கடும் போட்டி நிலவியது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசும் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. இப்போட்டியினை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி