சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14வது நாளாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், மேலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் தட்டுகள் ஏந்தி அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டம் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.