சகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கண்மாய் பகுதியில், மழைக்காலத்துடன் சேர்ந்து புதுவிதமான பறவைகள் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து தங்கியுள்ளன. அப்பகுதியில் மழை காரணமாக பசுமை சூழல் வளம் பெற்றுள்ளதால், பறவைகள் மரக்கிளைகளில் குரல் கொடுத்து சுழன்றாடும் காட்சி இயற்கை அழகை அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள், பறவைகளின் சத்தம் சுகமாக இருப்பதாகவும், இது இயற்கையின் அழகான தருணம் என்றும் தெரிவித்தனர். பறவையியல் வல்லுநர்கள், மழைக்காலம் காரணமாக பறவைகள் கருவேல மரங்களைத் தங்கும் இடமாகத் தேர்வு செய்துள்ளன என்றும், இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு நல்ல அறிகுறி என்றும் விளக்குகின்றனர்.