சிவகங்கை: வாலிபரை விரட்டி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை அருகே உள்ள பிள்ளைவயல் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாக்யராஜின் மகன் ராஜேஷ் (20) சிவகங்கை பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தபோது, மர்ம கும்பலால் விரட்டி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் அருண்பாண்டி (23), ஐயப்பன் (21), விஜய் (21), கதிர்வேல் (19), குணா (19), சரவணன் (19), தண்டீஸ்வரன் (19), நல்லமணி (22), கிஷோர் (18) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தொடர்புடைய செய்தி