சிவகங்கை: மீன் வியாபாரி உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

சிவகங்கை அருகே V. புதுக்குளத்தைச் சேர்ந்த 54 வயது மீன் வியாபாரி முத்து, கடந்த 15 ஆம் தேதி மதுரையிலிருந்து சிவகங்கைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது குடும்பத்தினர் ஒப்புதலுடன், முத்துவின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், தோல் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டு, ஐந்து பேருக்குப் பொருத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி