சிவகங்கை: நகராட்சி குப்பை தரம் பிரிக்கும் நிலையத்தில் தீ விபத்து

சிவகங்கை காளவாசல் வாட்டர் டேங்க் அருகே உள்ள நகராட்சி குப்பைகளைத் தரம் பிரிக்கும் நிலையத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பின்னர் மெல்ல மெல்ல பற்றிய தீயால் புகைமூட்டம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். 

தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் மாற்று வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் குப்பைத் தரம் பிரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ள நிலையில் இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 16வது முறையாக தீப்பிடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி