கூட்டணி கட்சிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் பி. ஆர். செந்தில் நாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய செந்தில் நாதன் எம்எல்ஏ, "வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். பிரதமர் வலிமைமிக்க தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளார். இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார். கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாண்டித்துரை, அமமுக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி