சிவகங்கை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களால் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, வேளாண்மைத்துறையின் சார்பில் 03 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை கண்காணிப்பு குழு தலைவர்/ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி