காளையார் கோவிலில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணிகள், அரசு பள்ளி மாணவியர் சமூக நீதி விடுதி செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக ஆதார் மைய செயல்பாடுகள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி நிலை, சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவுத் தரம், குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு முறைகள் மற்றும் சூசையப்பர்பட்டினம் அரசு பள்ளி மாணவியர் சமூக நீதி விடுதியில் உணவுத் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மேம்பாட்டுப் பணிகளுக்கு உத்தரவிட்டார். மாணவியர்களுடன் கலந்துரையாடி கருத்துகளையும் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி