சிவகங்கை: செப்டிக் டேங்கில் சிக்கிக்கொண்ட பசுமாடு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க் தொட்டியில் பசுமாடு ஒன்று சிக்கி கொண்டு தவித்த நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியேற்றினர். 

சிவகங்கை மேலூர் சாலையில் பழைய கைவிடப்பட்ட நீதிமன்ற கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு முறையான சுற்றுச்சுவர் கதவுகள் இல்லாததால் இப்பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் மேய்ச்சலுக்காக இந்த கட்டிடத்தின் பின் பகுதிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது ஏறியபோது பாரம் தாங்காமல் மேல் தளம் இடிந்து உள்ளே விழுந்ததுடன் பசுமாட்டின் கால் இடிந்த மேல் தள சிமெண்ட் தளத்திற்குள் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டது. 

இதனை கண்ட அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் உடனடியாக சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி சிமெண்ட் மேல் தளத்தை தூக்கி பசுமாட்டின் காலை வெளியே எடுத்து மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி