காளையார்கோவில்: உடல் தானம் செய்து நெகிழ வைத்த தம்பதியர்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் போஸ் (75) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (72) ஆகியோர் தங்கள் உடல் உறுப்புகளையும் உடலையும் தானம் செய்து மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். பணிக்காலத்திலேயே மாணவர்களுக்கு உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த போஸ், குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்தார். அவர்களின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி