கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய ஆலோசனை கூட்டம்

சிவகங்கை அமைப்பு சார்பில் நடைபெற்ற கட்டுமான சங்க தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நேரடியாகத் தகவல் வழங்கினார். தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், காலை வேளையில் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்காக உழவர் சந்தை அருகே தற்காலிக இடம் ஒதுக்கித் தருவதாக அவர் அறிவித்தார். இந்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை சிவன்கோயில் எதிரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி