சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விட்டனேரி கிராமம் மக்கள், தங்களது கிராமத்தில் பொதுப்பாதையை மறித்து வேலி அமைப்பதற்கும், அரசின் உரிய அனுமதி இல்லாமல் ராட்சத போர்வெல் அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். விட்டனேரி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்கள் அய்யம்பட்டி மற்றும் கிலுவச்சி கிராமங்களுக்குச் செல்ல சுமார் 12 மீட்டர் அகலமுள்ள மண்சாலை உள்ளது. தற்போது அந்தச் சாலையில் அரசு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் அந்தச் சாலையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். அவர்கள் அரசின் அனுமதி இல்லாமல் ராட்சத போர்வெல் அமைத்துவருகின்றனர். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போர்வெல் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.