காளையார்கோவில்: லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதப்படைக்கி கிராமத்தைச் சேர்ந்த சமய பிரபு (18) என்ற கல்லூரி மாணவர், சிவகங்கை பஸ் நிலையத்திற்கு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பையூர் குடியிருப்பு பகுதியில் எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை நகர இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி