சிவகங்கை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 305 மனுக்கள் பெறப்பட்டன. 

மேலும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடி நாளிற்கென ரூ. 5,00,000/-க்கு மேல் வசூல் செய்தமைக்காக, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட பதிவாளர் (நிருவாகம்) சிவகங்கை கவிநிலவு, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராஜ்மோகன் ஆகிய 03 நபர்களுக்கு மேதகு ஆளுநரின் பாராட்டு சான்று மற்றும் வெள்ளி பதக்கத்தினையும், இதேபோன்று, ரூ. 3,00,000/- முதல் ரூ. 5,00,000/- வரை வசூல் செய்தமைக்காக, 

மாவட்ட பதிவாளர் (நிருவாகம்) காரைக்குடி இயலரசி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத் (புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த போது) ஆகிய 02 நபர்களுக்கு தலைமைச் செயலரின் பாராட்டு சான்று மற்றும் வெள்ளி பதக்கத்தினையும் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நீரில் மூழ்கி இறந்தமைக்காக, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1,00,000/- மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான காசோலையினையும் ரூ. 04.37 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி