தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI Programmer) பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர்/பழங்குடியினராகவும், 18-30 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமலும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். www.tahdco.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.