சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில், www.dncwb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகி விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.