சிவகங்கை: ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியதலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியதலைவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் , விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். 

அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறும் இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

அவ்வாறு, நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்திடவும், நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆஷா அஜித் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி