தமிழக முதல்வர் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டம் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை காலை உணவு வழங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.