சிவகங்கை அருகே சாமியார் பட்டி கிராமத்தில், ராமாயி (63) என்பவர் கடம்பங்குளம் கண்மாயில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து புளியம்பழம் வேண்டுமா என்று கேட்டுள்ளார். அவர் பதிலளிக்கும்போது, கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.