சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள இருப்பான் பூச்சி பகுதியைச் சேர்ந்த தனம் (வயது 40) என்பவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது, ஆண்டி சூரணி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வன் என்பவர் கையில் வாளை வைத்துப் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காளையார் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணபோஸ் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.