சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மானாமதுரையை சேர்ந்த ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்