சிவகங்கை அருகே, தவணை செலுத்தாததால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் கோபமடைந்த தக்காளி வியாபாரி சந்தோஷ், சோழா பைனான்ஸ் அலுவலகத்தில் புகுந்து, அங்கு பணியாற்றிய சிவகங்கை மாவட்ட பாஜக துணைத் தலைவர் சுகனேஸ்வரியின் கணவர் விஜயகுமாரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.