சிவகங்கை: இலவச சட்ட உதவி பெற தொலைபேசி எண் பதாகை

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் படி, இலவச சட்ட உதவி, ஆலோசனைகள் பெறுவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட பதாகையை மாவட்ட முதன்மை நீதிபதி சொணம் ஜெ. நடராஜன் திறந்துவைத்தாா்.

சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி, ஆலோசனைகள் பெறுவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 15100, இணைய வழி முகவரி உடைய விளம்பர பதாகையும் அமைக்கப்பட்டது.

இதை பொதுமக்கள், வழக்குறைஞா்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டாா். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இ. பக்தவாச்சலு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜி. முத்துக்குமரன், மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா். கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ. பசும்பொன் சண்முகையா, சாா்பு நீதிபதி பிவி. சாண்டில்யன், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என். செந்தில்முரளி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் ஆா். சுப்பையா, குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிபதி பி. செல்வம், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஆப்ரின் பேகம், பயிற்சி நீதிபதிகள், வழக்குறைஞா்கள் சங்கத் தலைவா் ஓ. ஜானகிராமன், செயலா் சித்திரைச்சாமி, வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி