சிவகங்கையில், ஓலா, உபேர் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்றும், அந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாதம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பு தலைமை தாங்கினார்.