சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை அமரர் ஊர்தியில் கொண்டு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், அரவிந்த், அண்ணாமலை, குணா, முத்துராஜா ஆகியோர் வாகனத்திற்கு வழிவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து மெய்யானமூர்த்தி தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, முன்விரோதம் காரணமாக மெய்யானமூர்த்தியை 5 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.