சத்துணவு–அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி அரசு பணியிடங்களை நிரப்பும் போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி