சிவகங்கையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் 125 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இரட்டிப்பு செய்து சீர்குலைக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட கழக செயலாளர் PR. செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுகவின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி