சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை சிதைக்கும் புதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் மணியம்மா தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க துணைத்தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான லாசர் கண்டன உரையாற்றினார்.