சிவகங்கை சிபி காலனியைச் சேர்ந்த சமயமுத்து, தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் 20 மாதங்களுக்கு மாதம் ரூ. 1.25 லட்சம் செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். தவணை செலுத்த முடியாத நிலையில், செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டார். பணத்தை வழங்க இழுத்தடித்ததால் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், செலுத்திய தொகையில் 5% நிர்வாகச் செலவு கழித்து ரூ. 1,18,750-ஐ ஒரு மாதத்திற்குள் வழங்கவும், வழக்கு செலவிற்காக ரூ. 20,000 கூடுதலாக வழங்கவும் சிட்பண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.