சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பேருந்து நிறுத்தம் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்மாற்றியில் மோதியது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதுவயல் பிரிவின் உதவி மின் பொறியாளர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.