திங்கள்கிழமை இரவு, அருகிலுள்ள இடையமேலூர் திருவிழாவில் நடைபெற்று வந்த கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு, தனது நண்பர்கள் ஹரிகரன் மற்றும் அஜித் குமாருடன் இருசக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். புதுப்பட்டி அருகே வந்தபோது, ஒரு மர்ம கார் திடீரென பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது. மோதலில் கீழே விழுந்த மனோஜ் பிரபுவை, அந்த கும்பல் காரிலிருந்து இறங்கி விரட்டி சென்று அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்து, மீண்டும் காரில் ஏறி தப்பியோடினர். தகவல் அறிந்த உடனே, அவரது நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது