சிவகங்கையில் அதிமுக தேர்தல் அறிக்கை குழு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்றும் தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை திமுகவின் ஏமாற்று அரசியல் என்றும், மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.