சிவகங்கை: பாதுகாப்பை மீறி உள்ளே வந்த நபரால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின் போது, சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தலைக்கவசம் அணியாத திமுக கரைவேட்டி கட்டிய நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றார். அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசார் அவரைத் தடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி